Loading...
மகத்துவம் • 5 வசனங்கள்
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
1. மகத்துவமிக்க இரவில்447 இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
2. மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
3. மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
4. வானவர்களும், ரூஹும்444 அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
5. ஸலாம்!159 இது கிழக்கு வெளுக்கும் வரை இருக்கும்.