அல்லைல்‌

இரவு • 21 வசனங்கள்

وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ 

﴾ 92:1 ﴿
﴾92:1﴿

1. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!379

وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ 

﴾ 92:2 ﴿
﴾92:2﴿

2. பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக!379

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ 

﴾ 92:3 ﴿
﴾92:3﴿

3. ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன்368 மீது சத்தியமாக!379

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ 

﴾ 92:4 ﴿
﴾92:4﴿

4. உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ  وَصَدَّقَ بِالْحُسْنَىٰ  فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ 

﴾ 92:5,6,7 ﴿
﴾92:5,6,7﴿

5, 6, 7. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம்.26

وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ  وَكَذَّبَ بِالْحُسْنَىٰ  فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ 

﴾ 92:8,9,10 ﴿
﴾92:8,9,10﴿

8, 9, 10. யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.26

وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ 

﴾ 92:11 ﴿
﴾92:11﴿

11. அவன் விழும்போது அவனது செல்வம் அவனைக் காக்காது.

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ 

﴾ 92:12 ﴿
﴾92:12﴿

12. நேர்வழி நம்மைச் சேர்ந்தது.

وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ 

﴾ 92:13 ﴿
﴾92:13﴿

13. மறுமையும், இம்மையும் நமக்கே உரியது.

فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ 

﴾ 92:14 ﴿
﴾92:14﴿

14. கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.

لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى 

﴾ 92:15 ﴿
﴾92:15﴿

15. துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் எரிய மாட்டார்கள்.

الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ 

﴾ 92:16 ﴿
﴾92:16﴿

16. அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى 

﴾ 92:17 ﴿
﴾92:17﴿

17. இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார்.

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ 

﴾ 92:18 ﴿
﴾92:18﴿

18. அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.

وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ  إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ 

﴾ 92:19,20 ﴿
﴾92:19,20﴿

19, 20. மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக்கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.26

وَلَسَوْفَ يَرْضَىٰ 

﴾ 92:21 ﴿
﴾92:21﴿

21. பின்னர் அவர் திருப்தியடைவார்.

92

Settings