அஷ்ஷம்ஸ்‌

சூரியன் • 15 வசனங்கள்

وَالشَّمْسِ وَضُحَاهَا 

﴾ 91:1 ﴿
﴾91:1﴿

1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!379

وَالْقَمَرِ إِذَا تَلَاهَا 

﴾ 91:2 ﴿
﴾91:2﴿

2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!379

وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا 

﴾ 91:3 ﴿
﴾91:3﴿

3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!379

وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا 

﴾ 91:4 ﴿
﴾91:4﴿

4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!379

وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا 

﴾ 91:5 ﴿
﴾91:5﴿

5. வானத்தின்507 மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!379

وَالْأَرْضِ وَمَا طَحَاهَا 

﴾ 91:6 ﴿
﴾91:6﴿

6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!379

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا 

﴾ 91:7 ﴿
﴾91:7﴿

7. உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!379

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا 

﴾ 91:8 ﴿
﴾91:8﴿

8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا 

﴾ 91:9 ﴿
﴾91:9﴿

9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.

وَقَدْ خَابَ مَن دَسَّاهَا 

﴾ 91:10 ﴿
﴾91:10﴿

10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا 

﴾ 91:11 ﴿
﴾91:11﴿

11. ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர்.

إِذِ انبَعَثَ أَشْقَاهَا 

﴾ 91:12 ﴿
﴾91:12﴿

12. அப்போது அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன்வந்தான்.

فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا 

﴾ 91:13 ﴿
﴾91:13﴿

13. 'இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!' என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (சாலிஹ்) கூறினார்.

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا 

﴾ 91:14 ﴿
﴾91:14﴿

14. அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களின் இறைவன் அவர்களைத் தரைமட்டமாக்கினான்.

وَلَا يَخَافُ عُقْبَاهَا 

﴾ 91:15 ﴿
﴾91:15﴿

15. அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை.

91

Settings