அல் ஃபஜ்
விடியற்காலை • 30 வசனங்கள்
وَالْفَجْرِ
﴾ 89:1 ﴿
﴾89:1﴿
1. கிழக்கு வெளுக்கும் நேரத்தின் மீது மீது சத்தியமாக!379
وَلَيَالٍ عَشْرٍ
﴾ 89:2 ﴿
﴾89:2﴿
2. பத்து இரவுகள்387 மீதும் சத்தியமாக!379
وَالشَّفْعِ وَالْوَتْرِ
﴾ 89:3 ﴿
﴾89:3﴿
3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!379
وَاللَّيْلِ إِذَا يَسْرِ
﴾ 89:4 ﴿
﴾89:4﴿
4. கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!379
هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ
﴾ 89:5 ﴿
﴾89:5﴿
5. அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ إِرَمَ ذَاتِ الْعِمَادِ
﴾ 89:6,7 ﴿
﴾89:6,7﴿
6, 7. ஆது சமுதாயத்தையும், தூண்களையுடைய இரம் சமுதாயத்தையும் உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?26
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
﴾ 89:8 ﴿
﴾89:8﴿
8. உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை.
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
﴾ 89:9,10 ﴿
﴾89:9,10﴿
9, 10. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?)26
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
﴾ 89:11 ﴿
﴾89:11﴿
11. அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
﴾ 89:12 ﴿
﴾89:12﴿
12. அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்.
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
﴾ 89:13 ﴿
﴾89:13﴿
13. எனவே உமது இறைவன் அவர்களுக்கு எதிராக வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ
﴾ 89:14 ﴿
﴾89:14﴿
14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
﴾ 89:15 ﴿
﴾89:15﴿
15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது484 'என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்' என்று கூறுகிறான்.
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
﴾ 89:16 ﴿
﴾89:16﴿
16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது484 'என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்' எனக் கூறுகிறான்.
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ
﴾ 89:17 ﴿
﴾89:17﴿
17. அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை.
وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
﴾ 89:18 ﴿
﴾89:18﴿
18. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا
﴾ 89:19 ﴿
﴾89:19﴿
19. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
﴾ 89:20 ﴿
﴾89:20﴿
20. செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
﴾ 89:21 ﴿
﴾89:21﴿
21. அவ்வாறில்லை! பூமி தூள்தூளாக நொறுக்கப்படும் போது,
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
﴾ 89:22 ﴿
﴾89:22﴿
22. வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது488,
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
﴾ 89:23 ﴿
﴾89:23﴿
23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
﴾ 89:24 ﴿
﴾89:24﴿
24. 'எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?' என்று கூறுவான்.
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ
﴾ 89:25 ﴿
﴾89:25﴿
25. அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.
وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ
﴾ 89:26 ﴿
﴾89:26﴿
26. அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
﴾ 89:27,28 ﴿
﴾89:27,28﴿
27, 28. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!26
فَادْخُلِي فِي عِبَادِي
﴾ 89:29 ﴿
﴾89:29﴿
29. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!
وَادْخُلِي جَنَّتِي
﴾ 89:30 ﴿
﴾89:30﴿
30. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.)