அல் ‌அஃலா

மிக உயர்ந்தவன் • 19 வசனங்கள்

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى 

﴾ 87:1 ﴿
﴾87:1﴿

1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

الَّذِي خَلَقَ فَسَوَّىٰ 

﴾ 87:2 ﴿
﴾87:2﴿

2. அவனே படைத்தான்.368 ஒழுங்குற அமைத்தான்.

وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ 

﴾ 87:3 ﴿
﴾87:3﴿

3. அவனே நிர்ணயித்தான். வழிகாட்டினான்.

وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ 

﴾ 87:4 ﴿
﴾87:4﴿

4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.

فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ 

﴾ 87:5 ﴿
﴾87:5﴿

5. எனவே அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ  إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ 

﴾ 87:6,7 ﴿
﴾87:6,7﴿

6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ 

﴾ 87:8 ﴿
﴾87:8﴿

8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.

فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ 

﴾ 87:9 ﴿
﴾87:9﴿

9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ 

﴾ 87:10 ﴿
﴾87:10﴿

10. (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.

وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى 

﴾ 87:11 ﴿
﴾87:11﴿

11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.

الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ 

﴾ 87:12 ﴿
﴾87:12﴿

12. அவனே பெரும் நெருப்பில் எரிவான்.

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ 

﴾ 87:13 ﴿
﴾87:13﴿

13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ 

﴾ 87:14 ﴿
﴾87:14﴿

14. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ 

﴾ 87:15 ﴿
﴾87:15﴿

15. அவன், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான்.

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا 

﴾ 87:16 ﴿
﴾87:16﴿

16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.

وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ 

﴾ 87:17 ﴿
﴾87:17﴿

17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.

إِنَّ هَـٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ  صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ 

﴾ 87:18,19 ﴿
﴾87:18,19﴿

18, 19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.26

87

Settings