அந் நபா
அந்தச் செய்தி • 40 வசனங்கள்
عَمَّ يَتَسَاءَلُونَ
﴾ 78:1 ﴿
﴾78:1﴿
1. எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?
عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
﴾ 78:2,3 ﴿
﴾78:2,3﴿
2, 3. எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!26
كَلَّا سَيَعْلَمُونَ
﴾ 78:4 ﴿
﴾78:4﴿
4. அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
﴾ 78:5 ﴿
﴾78:5﴿
5. பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا
﴾ 78:6,7 ﴿
﴾78:6,7﴿
6,7. பூமியைத் தொட்டிலாகவும்,284 மலைகளை முளைகளாகவும்248 நாம் ஆக்கவில்லையா?26
وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
﴾ 78:8 ﴿
﴾78:8﴿
8. உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
﴾ 78:9 ﴿
﴾78:9﴿
9. உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
﴾ 78:10 ﴿
﴾78:10﴿
10. இரவை ஆடையாக்கினோம்.
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
﴾ 78:11 ﴿
﴾78:11﴿
11. பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம்.
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
﴾ 78:12 ﴿
﴾78:12﴿
12. உங்களுக்கு மேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம்.
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
﴾ 78:13 ﴿
﴾78:13﴿
13. ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம்.
وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا
﴾ 78:14,15,16 ﴿
﴾78:14,15,16﴿
14, 15, 16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார்மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.26
إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
﴾ 78:17 ﴿
﴾78:17﴿
17. தீர்ப்பு நாள்1 நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
﴾ 78:18 ﴿
﴾78:18﴿
18. ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
﴾ 78:19 ﴿
﴾78:19﴿
19. வானம்507 திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
﴾ 78:20 ﴿
﴾78:20﴿
20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا لِّلطَّاغِينَ مَآبًا
﴾ 78:21,22 ﴿
﴾78:21,22﴿
21, 22. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.26
لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
﴾ 78:23 ﴿
﴾78:23﴿
23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
﴾ 78:24 ﴿
﴾78:24﴿
24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
﴾ 78:25 ﴿
﴾78:25﴿
25. கொதி நீரையும், சீழையும் தவிர.
جَزَاءً وِفَاقًا
﴾ 78:26 ﴿
﴾78:26﴿
26. இது செயலுக்கேற்ற கூலி!
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
﴾ 78:27 ﴿
﴾78:27﴿
27. அவர்கள் (நமது) விசாரணையை நம்பாதிருந்தனர்.
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
﴾ 78:28 ﴿
﴾78:28﴿
28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
﴾ 78:29 ﴿
﴾78:29﴿
29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
﴾ 78:30 ﴿
﴾78:30﴿
30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا دِهَاقًا
﴾ 78:31,32,33,34 ﴿
﴾78:31,32,33,34﴿
31, 32, 33, 34. இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.26
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
﴾ 78:35 ﴿
﴾78:35﴿
35. அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
﴾ 78:36 ﴿
﴾78:36﴿
36. இது உமது இறைவனிடமிருந்து கணக்கிட்டு வழங்கப்பட்ட கூலி.
رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
﴾ 78:37 ﴿
﴾78:37﴿
37. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது.
يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
﴾ 78:38 ﴿
﴾78:38﴿
38. ரூஹும்,444 வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا
﴾ 78:39 ﴿
﴾78:39﴿
39. இதுவே உண்மையான நாள்!1 விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.
إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
﴾ 78:40 ﴿
﴾78:40﴿
40. சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில்1 தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏகஇறைவனை) மறுப்பவன் கூறுவான்.