அல் முர்ஸலாத்
அனுப்பப்படும் காற்று • 50 வசனங்கள்
وَالْمُرْسَلَاتِ عُرْفًا فَالْعَاصِفَاتِ عَصْفًا
﴾ 77:1,2 ﴿
﴾77:1,2﴿
1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக!379&26
وَالنَّاشِرَاتِ نَشْرًا فَالْفَارِقَاتِ فَرْقًا
﴾ 77:3,4 ﴿
﴾77:3,4﴿
3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக!379&26
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا عُذْرًا أَوْ نُذْرًا
﴾ 77:5,6 ﴿
﴾77:5,6﴿
5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக!379&26
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ
﴾ 77:7 ﴿
﴾77:7﴿
7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
﴾ 77:8 ﴿
﴾77:8﴿
8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது,
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ
﴾ 77:9 ﴿
﴾77:9﴿
9. வானம்507 பிளக்கப்படும்போது,
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
﴾ 77:10 ﴿
﴾77:10﴿
10. மலைகள் சிதறடிக்கப்படும்போது,
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
﴾ 77:11 ﴿
﴾77:11﴿
11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும்போது (அது நடந்தேறும்)
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ
﴾ 77:12 ﴿
﴾77:12﴿
12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப் படுத்தப்பட்டுள்ளது?
لِيَوْمِ الْفَصْلِ
﴾ 77:13 ﴿
﴾77:13﴿
13. தீர்ப்பு நாளுக்காகவே! 1
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
﴾ 77:14 ﴿
﴾77:14﴿
14. தீர்ப்பு நாள்1 என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:15 ﴿
﴾77:15﴿
15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
﴾ 77:16 ﴿
﴾77:16﴿
16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
﴾ 77:17 ﴿
﴾77:17﴿
17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
﴾ 77:18 ﴿
﴾77:18﴿
18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:19 ﴿
﴾77:19﴿
19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ
﴾ 77:20 ﴿
﴾77:20﴿
20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ
﴾ 77:21,22 ﴿
﴾77:21,22﴿
21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதைப் பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?26
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
﴾ 77:23 ﴿
﴾77:23﴿
23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:24 ﴿
﴾77:24﴿
24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا أَحْيَاءً وَأَمْوَاتًا
﴾ 77:25,26 ﴿
﴾77:25,26﴿
25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா?26
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا
﴾ 77:27 ﴿
﴾77:27﴿
27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்.248 இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:28 ﴿
﴾77:28﴿
28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
﴾ 77:29,30 ﴿
﴾77:29,30﴿
29, 30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!26
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
﴾ 77:31 ﴿
﴾77:31﴿
31. அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
﴾ 77:32 ﴿
﴾77:32﴿
32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
﴾ 77:33 ﴿
﴾77:33﴿
33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:34 ﴿
﴾77:34﴿
34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
﴾ 77:35 ﴿
﴾77:35﴿
35. இது அவர்கள் பேச முடியாத நாள்!1
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
﴾ 77:36 ﴿
﴾77:36﴿
36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:37 ﴿
﴾77:37﴿
37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
هَـٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ
﴾ 77:38 ﴿
﴾77:38﴿
38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்!1 உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
﴾ 77:39 ﴿
﴾77:39﴿
39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:40 ﴿
﴾77:40﴿
40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
﴾ 77:41 ﴿
﴾77:41﴿
41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
﴾ 77:42 ﴿
﴾77:42﴿
42. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும் இருப்பார்கள்.
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
﴾ 77:43 ﴿
﴾77:43﴿
43. 'நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (எனக் கூறப்படும்.)
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
﴾ 77:44 ﴿
﴾77:44﴿
44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:45 ﴿
﴾77:45﴿
45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
﴾ 77:46 ﴿
﴾77:46﴿
46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:47 ﴿
﴾77:47﴿
47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ
﴾ 77:48 ﴿
﴾77:48﴿
48. ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 77:49 ﴿
﴾77:49﴿
49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில்1 கேடு தான்.
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
﴾ 77:50 ﴿
﴾77:50﴿
50. இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்?