அல் கியாமா
இறைவன் முன்னால் நிற்கும் நாள் • 40 வசனங்கள்
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
﴾ 75:1 ﴿
﴾75:1﴿
1. கியாமத் நாள்1 மீது சத்தியம் செய்கிறேன்.
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
﴾ 75:2 ﴿
﴾75:2﴿
2. குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ
﴾ 75:3 ﴿
﴾75:3﴿
3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
﴾ 75:4 ﴿
﴾75:4﴿
4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208
بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
﴾ 75:5 ﴿
﴾75:5﴿
5. ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
﴾ 75:6 ﴿
﴾75:6﴿
6. 'கியாமத் நாள்1 எப்போது?' எனக் கேட்கிறான்.
فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
﴾ 75:7,8,9,10 ﴿
﴾75:7,8,9,10﴿
7, 8, 9, 10. பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில்1 மனிதன் கேட்பான்.26
كَلَّا لَا وَزَرَ
﴾ 75:11 ﴿
﴾75:11﴿
11. அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை.
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
﴾ 75:12 ﴿
﴾75:12﴿
12. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.
يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
﴾ 75:13 ﴿
﴾75:13﴿
13. அந்நாளில்1 மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான்.
بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
﴾ 75:14,15 ﴿
﴾75:14,15﴿
14, 15. மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.26
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
﴾ 75:16 ﴿
﴾75:16﴿
16. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
﴾ 75:17 ﴿
﴾75:17﴿
17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
﴾ 75:18 ﴿
﴾75:18﴿
18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
﴾ 75:19 ﴿
﴾75:19﴿
19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
﴾ 75:20 ﴿
﴾75:20﴿
20. அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.
وَتَذَرُونَ الْآخِرَةَ
﴾ 75:21 ﴿
﴾75:21﴿
21. மறுமையை1 விட்டுவிடுகிறீர்கள்.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
﴾ 75:22 ﴿
﴾75:22﴿
22. அந்நாளில்1 சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
﴾ 75:23 ﴿
﴾75:23﴿
23. தமது இறைவனைப் பார்த்துக்488 கொண்டிருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
﴾ 75:24 ﴿
﴾75:24﴿
24. சில முகங்கள் அந்நாளில்1 சோகமாக இருக்கும்.
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
﴾ 75:25 ﴿
﴾75:25﴿
25. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.
كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
﴾ 75:26,27 ﴿
﴾75:26,27﴿
26, 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக் குழியை அடைந்து விடும்போது 'மந்திரிப்பவன் யார்?' எனக் கூறப்படும்.26
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
﴾ 75:28 ﴿
﴾75:28﴿
28. 'அதுவே பிரிவு' என்று அவன் விளங்கிக் கொள்வான்.
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
﴾ 75:29 ﴿
﴾75:29﴿
29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
﴾ 75:30 ﴿
﴾75:30﴿
30. அந்நாளில்1 இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
﴾ 75:31 ﴿
﴾75:31﴿
31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.
وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
﴾ 75:32 ﴿
﴾75:32﴿
32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.
ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
﴾ 75:33 ﴿
﴾75:33﴿
33. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
﴾ 75:34 ﴿
﴾75:34﴿
34. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
﴾ 75:35 ﴿
﴾75:35﴿
35. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
﴾ 75:36 ﴿
﴾75:36﴿
36. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
﴾ 75:37 ﴿
﴾75:37﴿
37. அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?506
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
﴾ 75:38 ﴿
﴾75:38﴿
38. பின்னர் கருவுற்ற சினைமுட்டையானான்.365&506 பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான்.
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
﴾ 75:39 ﴿
﴾75:39﴿
39. அவனிலிருந்து437 ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.
أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ
﴾ 75:40 ﴿
﴾75:40﴿
40. இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?