அல் முத்தஸிர்
போர்த்தியிருப்பவர் • 56 வசனங்கள்
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
﴾ 74:1 ﴿
﴾74:1﴿
1. போர்த்திக் கொண்டிருப்பவரே!
قُمْ فَأَنذِرْ
﴾ 74:2 ﴿
﴾74:2﴿
2. எழுந்து எச்சரிக்கை செய்வீராக!
وَرَبَّكَ فَكَبِّرْ
﴾ 74:3 ﴿
﴾74:3﴿
3. உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!
وَثِيَابَكَ فَطَهِّرْ
﴾ 74:4 ﴿
﴾74:4﴿
4. உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக!
وَالرُّجْزَ فَاهْجُرْ
﴾ 74:5 ﴿
﴾74:5﴿
5. அசுத்தத்தை வெறுப்பீராக!
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
﴾ 74:6 ﴿
﴾74:6﴿
6. (மனிதரிடம்) அதிகம் எதிர்பார்த்து உதவாதீர்!
وَلِرَبِّكَ فَاصْبِرْ
﴾ 74:7 ﴿
﴾74:7﴿
7. உமது இறைவனுக்காகப் பொறுத்துக் கொள்வீராக!
فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
﴾ 74:8,9 ﴿
﴾74:8,9﴿
8, 9. ஸூர் ஊதப்படும் அந்நாள்1 மிகவும் சிரமமான நாள்.26
عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
﴾ 74:10 ﴿
﴾74:10﴿
10. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு (அது) இலேசானதாக இருக்காது.
ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
﴾ 74:11 ﴿
﴾74:11﴿
11. (யாருடைய துணையுமின்றி) நான் மட்டுமே யாரைப் படைத்தேனோ அவனை என்னோடு விட்டு விடுவீராக!
وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا وَبَنِينَ شُهُودًا
﴾ 74:12,13 ﴿
﴾74:12,13﴿
12, 13. அவனுக்கு நீண்ட செல்வத்தையும், கூடவே இருக்கும் ஆண் மக்களையும் கொடுத்தேன்.26
وَمَهَّدتُّ لَهُ تَمْهِيدًا
﴾ 74:14 ﴿
﴾74:14﴿
14. அவனுக்காக பல தயாரிப்புகளைச் செய்தேன்.
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
﴾ 74:15 ﴿
﴾74:15﴿
15. பின்னரும் நான் அதிகப்படுத்த வேண்டும் என அவன் ஆசைப்படுகிறான்.
كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا
﴾ 74:16 ﴿
﴾74:16﴿
16. அவ்வாறில்லை! அவன் நமது வசனங்களை மறுப்பவனாக இருக்கிறான்.
سَأُرْهِقُهُ صَعُودًا
﴾ 74:17 ﴿
﴾74:17﴿
17. அவனுக்குச் சிரமம் தரும் வேதனை அளிப்பேன்.
إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ
﴾ 74:18 ﴿
﴾74:18﴿
18. அவன் (நமக்கு எதிராகச்) சிந்தித்தான். தீர்மானித்தான்.
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
﴾ 74:19 ﴿
﴾74:19﴿
19. ஆகவே அவன் சபிக்கப்பட்டான். அவன் எவ்வாறு தீர்மானித்தான்?
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
﴾ 74:20 ﴿
﴾74:20﴿
20. பின்னரும் அவன் சபிக்கப்பட்டான். அவன் எவ்வாறு தீர்மானித்தான்?
ثُمَّ نَظَرَ
﴾ 74:21 ﴿
﴾74:21﴿
21. பின்னர் சிந்தித்தான்.
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
﴾ 74:22 ﴿
﴾74:22﴿
22. பின்னர் கடுகடுத்து முகம் சுளித்தான்.
ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ
﴾ 74:23 ﴿
﴾74:23﴿
23. பின்னர் புறக்கணித்து கர்வம் கொண்டான்.
فَقَالَ إِنْ هَـٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ إِنْ هَـٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
﴾ 74:24,25 ﴿
﴾74:24,25﴿
24, 25. 'இது மயக்கத்தை ஏற்படுத்தும் சூனியம்357 தவிர வேறு இல்லை;285 இது மனிதனின் சொல் தவிர வேறு இல்லை' என்று கூறுகிறான்.26
سَأُصْلِيهِ سَقَرَ
﴾ 74:26 ﴿
﴾74:26﴿
26. அவனை ஸகர் (எனும் நரகி)ல் கருகச் செய்வேன்.
وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ
﴾ 74:27 ﴿
﴾74:27﴿
27. ஸகர் என்றால் என்ன என்பது உமக்கு எப்படித் தெரியும்?
لَا تُبْقِي وَلَا تَذَرُ
﴾ 74:28 ﴿
﴾74:28﴿
28. அது மிச்சம் வைக்காது. விட்டும் வைக்காது.
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
﴾ 74:29 ﴿
﴾74:29﴿
29. தோலை (கரித்து) மாற்றிவிடும்.
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
﴾ 74:30 ﴿
﴾74:30﴿
30. அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர்.354
وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
﴾ 74:31 ﴿
﴾74:31﴿
31. நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டோர்27 உறுதி கொள்வதற்காகவும், நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும், நம்பிக்கை கொண்டோரும் வேதம் வழங்கப்பட்டோரும்27 சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும், யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்களும் (நம்மை) மறுப்போரும் இதன் மூலம் அல்லாஹ் என்ன முன்மாதிரியை நாடுகிறான்?' என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு அமைத்தோம்) இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.
كَلَّا وَالْقَمَرِ
﴾ 74:32 ﴿
﴾74:32﴿
32. ஆம்! சந்திரன் மீது ஆணையாக!379
وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ
﴾ 74:33 ﴿
﴾74:33﴿
33. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது ஆணையாக!379
وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
﴾ 74:34 ﴿
﴾74:34﴿
34. வெளிச்சம் தரும் காலைப் பொழுதின் மீது ஆணையாக!379
إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ
﴾ 74:35 ﴿
﴾74:35﴿
35. அது பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.
نَذِيرًا لِّلْبَشَرِ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
﴾ 74:36,37 ﴿
﴾74:36,37﴿
36, 37. அது முன்னேறவோ, பின்தங்கவோ விரும்புகின்ற மனிதனை எச்சரிப்பதாகும்.26
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
﴾ 74:38 ﴿
﴾74:38﴿
38. ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்.265
إِلَّا أَصْحَابَ الْيَمِينِ
﴾ 74:39 ﴿
﴾74:39﴿
39. வலது புறத்தில் இருப்போர் தவிர.
فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
﴾ 74:40,41,42 ﴿
﴾74:40,41,42﴿
40, 41, 42. அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் 'உங்களை நரகத்தில் சேர்த்தது எது?' என்று விசாரிப்பார்கள்.26
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
﴾ 74:43,44 ﴿
﴾74:43,44﴿
43, 44. 'நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை' எனக் கூறுவார்கள்.26
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
﴾ 74:45 ﴿
﴾74:45﴿
45. (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ
﴾ 74:46 ﴿
﴾74:46﴿
46. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதி வந்தோம்.
حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ
﴾ 74:47 ﴿
﴾74:47﴿
47. உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை (எனவும் கூறுவார்கள்).
فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
﴾ 74:48 ﴿
﴾74:48﴿
48. எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை17 அவர்களுக்குப் பயன் தராது.
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
﴾ 74:49 ﴿
﴾74:49﴿
49. இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ فَرَّتْ مِن قَسْوَرَةٍ
﴾ 74:50,51 ﴿
﴾74:50,51﴿
50, 51. அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.26
بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
﴾ 74:52 ﴿
﴾74:52﴿
52. ஆம்! ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்குக் கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறான்.
كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ الْآخِرَةَ
﴾ 74:53 ﴿
﴾74:53﴿
53. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் மறுமையை அஞ்சுவதில்லை.
كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ
﴾ 74:54 ﴿
﴾74:54﴿
54. அவ்வாறில்லை! இது அறிவுரை.
فَمَن شَاءَ ذَكَرَهُ
﴾ 74:55 ﴿
﴾74:55﴿
55. விரும்பியவர் இதில் படிப்பினை பெறலாம்.
وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ
﴾ 74:56 ﴿
﴾74:56﴿
56. அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் படிப்பினை பெறுவதில்லை. அவனே அஞ்சத்தக்கவன்; மன்னித்தல் உடையவன்.