அல் மஆரிஜ்
தகுதிகள் • 44 வசனங்கள்
سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ لِّلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ مِّنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ
﴾ 70:1,2,3 ﴿
﴾70:1,2,3﴿
1, 2, 3. தகுதிகள் உடைய அல்லாஹ்விடமிருந்து (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நிகழவுள்ள வேதனை குறித்துக் கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை.26
تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
﴾ 70:4 ﴿
﴾70:4﴿
4. வானவர்களும், ரூஹும்444 ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்.293
فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا
﴾ 70:5 ﴿
﴾70:5﴿
5. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிப்பீராக!
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا
﴾ 70:6 ﴿
﴾70:6﴿
6. அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர்.
وَنَرَاهُ قَرِيبًا
﴾ 70:7 ﴿
﴾70:7﴿
7. நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.
يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ
﴾ 70:8 ﴿
﴾70:8﴿
8. அந்நாளில் வானம்507 உருக்கிய செம்பு போல் ஆகும்.
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ
﴾ 70:9 ﴿
﴾70:9﴿
9. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا
﴾ 70:10 ﴿
﴾70:10﴿
10. எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ
﴾ 70:11,12,13,14 ﴿
﴾70:11,12,13,14﴿
11, 12, 13, 14. அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின்1 வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.26
كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ
﴾ 70:15 ﴿
﴾70:15﴿
15. அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும்.
نَزَّاعَةً لِّلشَّوَىٰ
﴾ 70:16 ﴿
﴾70:16﴿
16. அது தோலை உரிக்கும்.
تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ وَجَمَعَ فَأَوْعَىٰ
﴾ 70:17,18 ﴿
﴾70:17,18﴿
17, 18. பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.26
۞ إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا
﴾ 70:19 ﴿
﴾70:19﴿
19. மனிதன் பதறுபவனாக படைக்கப்பட்டுள்ளான்.368
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا
﴾ 70:20 ﴿
﴾70:20﴿
20. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
﴾ 70:21 ﴿
﴾70:21﴿
21. அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.
إِلَّا الْمُصَلِّينَ
﴾ 70:22 ﴿
﴾70:22﴿
22. தொழுகையாளிகளைத் தவிர.
الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ
﴾ 70:23 ﴿
﴾70:23﴿
23. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள்.
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ
﴾ 70:24,25 ﴿
﴾70:24,25﴿
24, 25. யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் அறியப்பட்ட உரிமை இருக்கும்.26
وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ
﴾ 70:26 ﴿
﴾70:26﴿
26. அவர்கள் தீர்ப்பு நாளை1 நம்புவார்கள்.
وَالَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ
﴾ 70:27 ﴿
﴾70:27﴿
27. அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ
﴾ 70:28 ﴿
﴾70:28﴿
28. அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
﴾ 70:29,30 ﴿
﴾70:29,30﴿
29, 30. தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்கள்107 மீதே தவிர அவர்கள் தமது கற்புகளைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் இழிவுபடுத்தப்பட்டோர் அல்லர்.26
فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْعَادُونَ
﴾ 70:31 ﴿
﴾70:31﴿
31. இதற்கு அப்பால் தேடுவோரே வரம்பு மீறியவர்கள்.
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
﴾ 70:32 ﴿
﴾70:32﴿
32. அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.
وَالَّذِينَ هُم بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ
﴾ 70:33 ﴿
﴾70:33﴿
33. அவர்கள் தமது சாட்சியங்களை நிலைநிறுத்துவார்கள்.
وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
﴾ 70:34 ﴿
﴾70:34﴿
34. அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.
أُولَـٰئِكَ فِي جَنَّاتٍ مُّكْرَمُونَ
﴾ 70:35 ﴿
﴾70:35﴿
35. அவர்களே சொர்க்கச் சோலைகளில் மரியாதை செய்யப்படுபவர்கள்.
فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ
﴾ 70:36,37 ﴿
﴾70:36,37﴿
36, 37. (முஹம்மதே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக அவர்கள் உமக்கு முன்னே சுற்றி வருகின்றனர்.26
أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ
﴾ 70:38 ﴿
﴾70:38﴿
38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் இன்பமான சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவதை விரும்புகிறானா?
كَلَّا ۖ إِنَّا خَلَقْنَاهُم مِّمَّا يَعْلَمُونَ
﴾ 70:39 ﴿
﴾70:39﴿
39. அது நடக்காது. அவர்களுக்குத் தெரிந்த(மூலத்)திலிருந்து அவர்களை நாம் படைத்தோம்.
فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ عَلَىٰ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
﴾ 70:40,41 ﴿
﴾70:40,41﴿
40, 41. கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய335 இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.379 அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.26
فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ
﴾ 70:42 ﴿
﴾70:42﴿
42. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நாளை1 அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் வீணிலும், விளையாட்டிலும் மூழ்கிக் கிடக்க விட்டுவிடுவீராக!
يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ
﴾ 70:43 ﴿
﴾70:43﴿
43. பலி பீடங்களை135 நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்.238
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ
﴾ 70:44 ﴿
﴾70:44﴿
44. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். இதுவே அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாள்1.