அல் கலம்
எழுதுகோல் • 52 வசனங்கள்
ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
﴾ 68:1 ﴿
﴾68:1﴿
1. நூன்.2 எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக!379
مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ
﴾ 68:2 ﴿
﴾68:2﴿
2. (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக468 இல்லை.
وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
﴾ 68:3 ﴿
﴾68:3﴿
3. உமக்கு முடிவுறாத கூலி உண்டு.
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
﴾ 68:4 ﴿
﴾68:4﴿
4. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ بِأَييِّكُمُ الْمَفْتُونُ
﴾ 68:5,6 ﴿
﴾68:5,6﴿
5, 6. உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும் பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள்.26
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
﴾ 68:7 ﴿
﴾68:7﴿
7. உமது இறைவன் தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை நன்கு அறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கு அறிந்தவன்.
فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ
﴾ 68:8 ﴿
﴾68:8﴿
8. பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்!
وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
﴾ 68:9 ﴿
﴾68:9﴿
9. (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர்.
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ
﴾ 68:10 ﴿
﴾68:10﴿
10. அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவனாகிய எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்!
هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ
﴾ 68:11 ﴿
﴾68:11﴿
11. அவன் குறை கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன்.
مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
﴾ 68:12 ﴿
﴾68:12﴿
12. நன்மையைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; குற்றம் புரிபவன்.
عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
﴾ 68:13 ﴿
﴾68:13﴿
13. முரடன். இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்.
أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
﴾ 68:14 ﴿
﴾68:14﴿
14. செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.)
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ
﴾ 68:15 ﴿
﴾68:15﴿
15. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் 'முன்னோர்களின் கட்டுக் கதைகள்' எனக் கூறுகிறான்.
سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ
﴾ 68:16 ﴿
﴾68:16﴿
16. அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.371
إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ
﴾ 68:17 ﴿
﴾68:17﴿
17. தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம்.484 'காலையில் அதை அறுவடை செய்வோம்' என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.
وَلَا يَسْتَثْنُونَ
﴾ 68:18 ﴿
﴾68:18﴿
18. இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.
فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ
﴾ 68:19 ﴿
﴾68:19﴿
19. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைப்பது அ(த்தோட் டத்)தைச் சுற்றி வளைத்தது.
فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ
﴾ 68:20 ﴿
﴾68:20﴿
20. அது காரிருள் போல் ஆனது.
فَتَنَادَوْا مُصْبِحِينَ أَنِ اغْدُوا عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَارِمِينَ فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ أَن لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ
﴾ 68:21,22,23,24 ﴿
﴾68:21,22,23,24﴿
21, 22, 23, 24. 'நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று அதில் எந்த ஏழையும் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திட நுழைந்திட வேண்டாம்' என்று அவர்கள் நடந்தவர்களாக குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள்.26
وَغَدَوْا عَلَىٰ حَرْدٍ قَادِرِينَ
﴾ 68:25 ﴿
﴾68:25﴿
25. தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் காலைப் பொழுதை அடைந்தனர்.
فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ
﴾ 68:26 ﴿
﴾68:26﴿
26. அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்டபோது, 'நாம் வழிமாறி (வேறு இடம்) வந்து விட்டோம்' என்று கூறினர்.
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
﴾ 68:27 ﴿
﴾68:27﴿
27. 'இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்' (என்றனர்.)
قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ
﴾ 68:28 ﴿
﴾68:28﴿
28. அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் 'நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?' என்று கேட்டார்.
قَالُوا سُبْحَانَ رَبِّنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ
﴾ 68:29 ﴿
﴾68:29﴿
29. 'எங்கள் இறைவன் தூயவன்.10 நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்' என்றனர்.
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَاوَمُونَ
﴾ 68:30 ﴿
﴾68:30﴿
30. அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.
قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ
﴾ 68:31 ﴿
﴾68:31﴿
31. 'எங்களுக்குக் கேடு ஏற்பட்டுவிட்டதே! நாங்கள் வரம்பு மீறிவிட்டோமே!' என்றனர்.
عَسَىٰ رَبُّنَا أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَا إِنَّا إِلَىٰ رَبِّنَا رَاغِبُونَ
﴾ 68:32 ﴿
﴾68:32﴿
32. 'இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்' (என்றும் கூறினர்.)
كَذَٰلِكَ الْعَذَابُ ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
﴾ 68:33 ﴿
﴾68:33﴿
33. இப்படித்தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின்1 வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
﴾ 68:34 ﴿
﴾68:34﴿
34. (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.
أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ
﴾ 68:35 ﴿
﴾68:35﴿
35. கட்டுப்பட்டு நடப்பவர்களைக் குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
﴾ 68:36 ﴿
﴾68:36﴿
36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
﴾ 68:37,38 ﴿
﴾68:37,38﴿
37, 38. தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று கூறுகின்ற, நீங்கள் வாசிக்கும் வேதம் உங்களுக்கு இருக்கிறதா?26
أَمْ لَكُمْ أَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ
﴾ 68:39 ﴿
﴾68:39﴿
39. நீங்கள் முடிவு செய்வது உங்களுக்கு உண்டு என நம்மிடம் செய்து கொண்ட, கியாமத் நாள்1 வரை செல்லத்தக்க, உடன்படிக்கைகள் உங்களிடம் உள்ளனவா?
سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
﴾ 68:40 ﴿
﴾68:40﴿
40. அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!
أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِن كَانُوا صَادِقِينَ
﴾ 68:41 ﴿
﴾68:41﴿
41. அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் கொண்டு வரட்டும்!
يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ
﴾ 68:42 ﴿
﴾68:42﴿
42. கெண்டைக்கால் திறக்கப்பட்டு488 ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.249
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ
﴾ 68:43 ﴿
﴾68:43﴿
43. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து விடும். அவர்கள் உடலில் குறை ஏதுமற்று இருந்த நிலையில் (உலகில்) ஸஜ்தாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
فَذَرْنِي وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا الْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
﴾ 68:44 ﴿
﴾68:44﴿
44. என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கருதுபவனையும் விட்டு விடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப் பிடிப்போம்.
وَأُمْلِي لَهُمْ ۚ إِنَّ كَيْدِي مَتِينٌ
﴾ 68:45 ﴿
﴾68:45﴿
45. அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். எனது சூழ்ச்சி உறுதியானது.6
أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ
﴾ 68:46 ﴿
﴾68:46﴿
46. (முஹம்மதே!) நீர் அவர்களிடம் கூலி கேட்டு அதனால் அவர்கள் கடன் சுமையைச் சுமக்கப் போகிறார்களா?
أَمْ عِندَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
﴾ 68:47 ﴿
﴾68:47﴿
47. அல்லது அவர்களிடம் மறைவானவை (பற்றிய அறிவு) இருந்து அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்களா?
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ الْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ
﴾ 68:48 ﴿
﴾68:48﴿
48. உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்)395 போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார்.
لَّوْلَا أَن تَدَارَكَهُ نِعْمَةٌ مِّن رَّبِّهِ لَنُبِذَ بِالْعَرَاءِ وَهُوَ مَذْمُومٌ
﴾ 68:49 ﴿
﴾68:49﴿
49. அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
فَاجْتَبَاهُ رَبُّهُ فَجَعَلَهُ مِنَ الصَّالِحِينَ
﴾ 68:50 ﴿
﴾68:50﴿
50. ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.
وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ
﴾ 68:51 ﴿
﴾68:51﴿
51. (முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்றபோது (ஏகஇறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். 'இவர் பைத்தியக்காரர்'468 என்றும் கூறுகின்றனர்.
وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
﴾ 68:52 ﴿
﴾68:52﴿
52. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.