அந்நஜ்மு

நட்சத்திரம் • 62 வசனங்கள்

وَالنَّجْمِ إِذَا هَوَىٰ 

﴾ 53:1 ﴿
﴾53:1﴿

1. நட்சத்திரம் மறையும்போது அதன் மேல் ஆணை!379

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ 

﴾ 53:2 ﴿
﴾53:2﴿

2. உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை.

وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ 

﴾ 53:3 ﴿
﴾53:3﴿

3. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ 

﴾ 53:4 ﴿
﴾53:4﴿

4. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ  ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ  وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ 

﴾ 53:5,6,7 ﴿
﴾53:5,6,7﴿

5, 6, 7. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார்.492 அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார்.26

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ 

﴾ 53:8 ﴿
﴾53:8﴿

8. பின்னர் இறங்கி நெருங்கினார்.

فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ 

﴾ 53:9 ﴿
﴾53:9﴿

9. அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது.

فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ 

﴾ 53:10 ﴿
﴾53:10﴿

10. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான்.

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ 

﴾ 53:11 ﴿
﴾53:11﴿

11. அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை.

أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ 

﴾ 53:12 ﴿
﴾53:12﴿

12. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?482

وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ  عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ 

﴾ 53:13,14 ﴿
﴾53:13,14﴿

13, 14. ஸித்ரதுல் முன்தஹாவுக்கு267 அருகில் மற்றொரு தடவையும்362 அவரை இறங்கக் கண்டார்.26

عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ 

﴾ 53:15 ﴿
﴾53:15﴿

15. அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது.

إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ  مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ 

﴾ 53:16,17 ﴿
﴾53:16,17﴿

16, 17. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடியபோது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை.26

لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ 

﴾ 53:18 ﴿
﴾53:18﴿

18. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.362

أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ  وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ 

﴾ 53:19,20 ﴿
﴾53:19,20﴿

19, 20. லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களா? 26

أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ 

﴾ 53:21 ﴿
﴾53:21﴿

21. உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா?

تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ 

﴾ 53:22 ﴿
﴾53:22﴿

22. அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான்.

إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ 

﴾ 53:23 ﴿
﴾53:23﴿

23. அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்து விட்டது.

أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ 

﴾ 53:24 ﴿
﴾53:24﴿

24. விரும்பியது (யாவும்) மனிதனுக்கு இருக்கிறதா?

فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ 

﴾ 53:25 ﴿
﴾53:25﴿

25. அல்லாஹ்வுக்கே மறுமையும், இம்மையும் உரியது.

۞ وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ 

﴾ 53:26 ﴿
﴾53:26﴿

26. வானங்களில்507 எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை17 சிறிதும் பயன் தராது.

إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ 

﴾ 53:27 ﴿
﴾53:27﴿

27. மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.

وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا 

﴾ 53:28 ﴿
﴾53:28﴿

28. அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.

فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا 

﴾ 53:29 ﴿
﴾53:29﴿

29. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு எதையும்) நாடாமல் நமது அறிவுரையைப் புறக்கணிப்பவரை அலட்சியம் செய்வீராக!

ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ 

﴾ 53:30 ﴿
﴾53:30﴿

30. இதுவே அவர்களது அறிவின் எல்லை. தனது வழியை விட்டும் தவறியவன் யார்? நேர்வழி பெற்றவன் யார்? என்பதை உமது இறைவன் நன்கறிவான்.

وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى 

﴾ 53:31 ﴿
﴾53:31﴿

31. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தீமை செய்தோரை அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாகத் தண்டிப்பான். நன்மை செய்து கொண்டிருப்போருக்கு அழகிய கூலியைக் கொடுப்பான்.

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ 

﴾ 53:32 ﴿
﴾53:32﴿

32.பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் விட்டு யார் விலகிக் கொள்கிறாரோ (அவர் மன்னிப்பு கேட்டால்) உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். அற்பமானவைகளைத் தவிர. (அதற்கு மன்னிப்பு கேட்பது அவசியமில்லை) உங்களைப் பூமியிலிருந்து படைத்தபோதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்தபோதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்!508 (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ 

﴾ 53:33 ﴿
﴾53:33﴿

33. புறக்கணிப்பவனைப் பார்த்தீரா?

وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ 

﴾ 53:34 ﴿
﴾53:34﴿

34. அவன் குறைவாகவே கொடுத்தான். (பிறர்) கொடுப்பதைத் தடுக்கிறான்.

أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ 

﴾ 53:35 ﴿
﴾53:35﴿

35. அவனிடம் மறைவானவை பற்றிய ஞானம் இருந்து அவன் (அதைக்) காண்கிறானா?

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ  وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ  أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ  وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ 

﴾ 53:36,37,38,39 ﴿
﴾53:36,37,38,39﴿

36, 37, 38, 39. மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் 'ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'265 என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?26

وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ 

﴾ 53:40 ﴿
﴾53:40﴿

40. அவனது உழைப்பு பின்னர் (மறுமையில்) காட்டப்படும்.

ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ 

﴾ 53:41 ﴿
﴾53:41﴿

41. பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான்.

وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنتَهَىٰ 

﴾ 53:42 ﴿
﴾53:42﴿

42. உமது இறைவனிடமே சென்றடைதல் உண்டு.

وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ 

﴾ 53:43 ﴿
﴾53:43﴿

43. அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.

وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا 

﴾ 53:44 ﴿
﴾53:44﴿

44. அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.

وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ  مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ 

﴾ 53:45,46 ﴿
﴾53:45,46﴿

45, 46. செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து506 அவனே ஆண் பெண் எனும் ஜோடிகளைப் படைத்தான்.26&368

وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ 

﴾ 53:47 ﴿
﴾53:47﴿

47. மீண்டும் உருவாக்குவது அவனைச் சேர்ந்தது.

وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ 

﴾ 53:48 ﴿
﴾53:48﴿

48. அவனே செல்வந்தனாக்கி திருப்தியடையச் செய்கிறான்.

وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ 

﴾ 53:49 ﴿
﴾53:49﴿

49. அவனே 'ஷிஃரா'வின் இறைவனாவான்.321

وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ  وَثَمُودَ فَمَا أَبْقَىٰ  وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ 

﴾ 53:50,51,52 ﴿
﴾53:50,51,52﴿

50, 51, 52. அவனே முந்தைய ஆது, மற்றும் ஸமூது சமுதாயத்தையும், முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் விட்டு வைக்காது அழித்தான். அவர்கள் மிகப் பெரும் அநீதி இழைத்து, வரம்பு மீறியோராக இருந்தனர்.26

وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ 

﴾ 53:53 ﴿
﴾53:53﴿

53. (லூத்துடைய சமுதாயமான) தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊராரையும் அழித்தான்.

فَغَشَّاهَا مَا غَشَّىٰ 

﴾ 53:54 ﴿
﴾53:54﴿

54. அதைச் சுற்றி வளைக்க வேண்டியது வளைத்துக் கொண்டது.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ 

﴾ 53:55 ﴿
﴾53:55﴿

55. உனது இறைவனின் அருட்கொடைகளில் எவற்றில் சந்தேகம் கொள்கிறாய்?

هَـٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ 

﴾ 53:56 ﴿
﴾53:56﴿

56. இது முந்தைய எச்சரிக்கைகளில் ஓர் எச்சரிக்கை!

أَزِفَتِ الْآزِفَةُ 

﴾ 53:57 ﴿
﴾53:57﴿

57. நெருங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!

لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ 

﴾ 53:58 ﴿
﴾53:58﴿

58. அல்லாஹ்வையன்றி அதை வெளிப்படுத்துபவர் எவருமில்லை.

أَفَمِنْ هَـٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ 

﴾ 53:59 ﴿
﴾53:59﴿

59. இந்தச் செய்தியிலா ஆச்சரியப்படுகிறீர்கள்?

وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ 

﴾ 53:60 ﴿
﴾53:60﴿

60. அழாமல் சிரிக்கிறீர்கள்?

وَأَنتُمْ سَامِدُونَ 

﴾ 53:61 ﴿
﴾53:61﴿

61. அலட்சியம் செய்வோராகவும் இருக்கிறீர்கள்?

فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩ 

﴾ 53:62 ﴿
﴾53:62﴿

62. அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்!396

53

Settings