அத்துகான்
அந்தப் புகை • 59 வசனங்கள்
حم
﴾ 44:1 ﴿
﴾44:1﴿
1. ஹா, மீம்.2
وَالْكِتَابِ الْمُبِينِ
﴾ 44:2 ﴿
﴾44:2﴿
2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!379
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
﴾ 44:3 ﴿
﴾44:3﴿
3. இதை பாக்கியம் நிறைந்த இரவில்341 நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
﴾ 44:4 ﴿
﴾44:4﴿
4. அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
أَمْرًا مِّنْ عِندِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
﴾ 44:5,6 ﴿
﴾44:5,6﴿
5, 6. (இது) நமது கட்டளை. உமது இறைவனின் அருளாக நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.26
رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
﴾ 44:7 ﴿
﴾44:7﴿
7. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றின் இறைவன். உறுதியாக நம்புவோராக நீங்கள் இருந்தால் (இதை அறிந்து கொள்ளுங்கள்!)
لَا إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
﴾ 44:8 ﴿
﴾44:8﴿
8. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். (அவன்) உங்கள் இறைவனும், முந்தைய உங்கள் முன்னோர்களின் இறைவனுமாவான்.
بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ
﴾ 44:9 ﴿
﴾44:9﴿
9. எனினும் அவர்கள் விளையாடிக் கொண்டு சந்தேகத்தில் உள்ளனர்.
فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ
﴾ 44:10 ﴿
﴾44:10﴿
10. வானம்507 தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை1 எதிர்பார்ப்பீராக!
يَغْشَى النَّاسَ ۖ هَـٰذَا عَذَابٌ أَلِيمٌ
﴾ 44:11 ﴿
﴾44:11﴿
11. அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை.
رَّبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
﴾ 44:12 ﴿
﴾44:12﴿
12. 'எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள்' (என்று கூறுவார்கள்)
أَنَّىٰ لَهُمُ الذِّكْرَىٰ وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ
﴾ 44:13 ﴿
﴾44:13﴿
13. அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவு படுத்தும் தூதர் வந்துள்ளார்.
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَّجْنُونٌ
﴾ 44:14 ﴿
﴾44:14﴿
14. பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். 'பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்'468 என்றும் கூறினர்.
إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَائِدُونَ
﴾ 44:15 ﴿
﴾44:15﴿
15. வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள்.
يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنتَقِمُونَ
﴾ 44:16 ﴿
﴾44:16﴿
16. மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில்1 தண்டிப்போம்.
۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ
﴾ 44:17 ﴿
﴾44:17﴿
17. அவர்களுக்கு முன் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைச் சோதித்துள்ளோம். அவர்களிடம் மரியாதைக்குரிய தூதர் வந்தார்.
أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ ۖ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
﴾ 44:18 ﴿
﴾44:18﴿
18. அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படையுங்கள்!181 நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
وَأَن لَّا تَعْلُوا عَلَى اللَّهِ ۖ إِنِّي آتِيكُم بِسُلْطَانٍ مُّبِينٍ
﴾ 44:19 ﴿
﴾44:19﴿
19. அல்லாஹ்வுக்கு எதிராக ஆணவம் கொள்ளாதீர்கள்! நான் உங்களிடம் தெளிவான சான்றைக் கொண்டு வருபவன்.
وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ
﴾ 44:20 ﴿
﴾44:20﴿
20. என்னை நீங்கள் கல் எறிந்து கொல்வதை விட்டும் உங்களுக்கும் இறைவனாகிய என் இறைவனிடம் காவல் தேடுகிறேன்.
وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ
﴾ 44:21 ﴿
﴾44:21﴿
21. 'என்னை நீங்கள் நம்பாவிட்டால் என்னை விட்டு விலகி விடுங்கள்!' (என்றார்.)
فَدَعَا رَبَّهُ أَنَّ هَـٰؤُلَاءِ قَوْمٌ مُّجْرِمُونَ
﴾ 44:22 ﴿
﴾44:22﴿
22. 'அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே உள்ளனர்' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தார்.
فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ
﴾ 44:23,24 ﴿
﴾44:23,24﴿
23, 24. 'எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் எதிரிகளால் பின்தொடரப்படுவீர்கள். பிளக்கப்பட்ட நிலையில் கடலை விட்டு விடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினராவர் (என்று இறைவன் கூறினான்.)'26
كَمْ تَرَكُوا مِن جَنَّاتٍ وَعُيُونٍ وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ
﴾ 44:25,26,27 ﴿
﴾44:25,26,27﴿
25, 26, 27. அவர்கள் எத்தனையோ சோலைகளையும், ஊற்றுகளையும், பயிர்களையும், மதிப்புமிக்க இடங்களையும், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த சொகுசுகளையும் விட்டுச் சென்றனர்.26
كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ
﴾ 44:28 ﴿
﴾44:28﴿
28. இப்படித்தான்! வேறு சமுதாயத்தினரை அதற்கு உரிமையாளர்களாக ஆக்கினோம்.
فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ
﴾ 44:29 ﴿
﴾44:29﴿
29. அவர்களுக்காக வானமும்,507 பூமியும் அழவில்லை. அவர்கள் அவகாசம் கொடுக்கப்படவும் இல்லை.
وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِينَ
﴾ 44:30,31 ﴿
﴾44:30,31﴿
30, 31. இஸ்ராயீலின் மக்களை ஃபிர்அவ்னின் இழிவு தரும் வேதனையிலிருந்து காப்பாற்றினோம். அவன் ஆணவம் கொண்டு வரம்பு மீறியவனாக இருந்தான்.26
وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ
﴾ 44:32 ﴿
﴾44:32﴿
32. அகிலத்தாரை விட அவர்களை அறிந்தே தேர்வு செய்தோம்.16
وَآتَيْنَاهُم مِّنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُّبِينٌ
﴾ 44:33 ﴿
﴾44:33﴿
33. எதில் தெளிவான சோதனை484 உள்ளதோ அத்தகைய சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம்.
إِنَّ هَـٰؤُلَاءِ لَيَقُولُونَ إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ فَأْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ
﴾ 44:34,35,36 ﴿
﴾44:34,35,36﴿
34, 35, 36. 'முதல் தடவை மரணிப்பது தவிர வேறு இல்லை. நாங்கள் எழுப்பப்படுவோராக இல்லை; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்!' என்று அவர்கள் கேட்கின்றனர்.26
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَاهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ
﴾ 44:37 ﴿
﴾44:37﴿
37. இவர்கள் சிறந்தவர்களா? அல்லது துப்பவு என்ற சமுதாயத்தினரா? இவர்களுக்கு முன் சென்றவர்களை நாம் அழித்து விட்டோம். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே இருந்தனர்.
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
﴾ 44:38 ﴿
﴾44:38﴿
38. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
﴾ 44:39 ﴿
﴾44:39﴿
39. தக்க காரணத்துடன் தவிர அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ
﴾ 44:40 ﴿
﴾44:40﴿
40. தீர்ப்பு நாள்1 தான் அவர்கள் அனைவருக்கும் (எச்சரிக்கப்பட்ட) நேரம்.
يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَن مَّوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ إِلَّا مَن رَّحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
﴾ 44:41,42 ﴿
﴾44:41,42﴿
41, 42. அந்நாளில் எந்த நண்பனும் எந்த நண்பனுக்கும் எந்த ஒன்றையும் பயனளிக்க மாட்டான். அல்லாஹ் அருள் புரிந்தவரைத் தவிர அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.26
إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ طَعَامُ الْأَثِيمِ
﴾ 44:43,44 ﴿
﴾44:43,44﴿
43, 44. ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.26
كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ كَغَلْيِ الْحَمِيمِ
﴾ 44:45,46 ﴿
﴾44:45,46﴿
45, 46. உருக்கிய செம்பைப் போலும், சூடேற்றப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.26
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
﴾ 44:47 ﴿
﴾44:47﴿
47. 'அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்குக் கொண்டு வாருங்கள்!' (என வானவர்களிடம் கூறப்படும்.)
ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
﴾ 44:48 ﴿
﴾44:48﴿
48. பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!
ذُقْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْكَرِيمُ إِنَّ هَـٰذَا مَا كُنتُم بِهِ تَمْتَرُونَ
﴾ 44:49,50 ﴿
﴾44:49,50﴿
49, 50. சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்றும் கூறப்படும்.)
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
﴾ 44:51,52 ﴿
﴾44:51,52﴿
51, 52. (இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.26
يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَابِلِينَ
﴾ 44:53 ﴿
﴾44:53﴿
53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் (இரு வகையான) பட்டாடை அணிந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.
كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ
﴾ 44:54 ﴿
﴾44:54﴿
54. இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.8
يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ
﴾ 44:55 ﴿
﴾44:55﴿
55. அச்சமின்றி ஒவ்வொரு கனியையும் அவர்கள் அங்கே கேட்பார்கள்.
لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ
﴾ 44:56 ﴿
﴾44:56﴿
56. முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள். நரக வேதனையிலிருந்து அவர்களை அவன் காப்பான்.
فَضْلًا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
﴾ 44:57 ﴿
﴾44:57﴿
57. (இது) உமது இறைவனின் அருட்கொடை. இதுவே மகத்தான வெற்றி.
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
﴾ 44:58 ﴿
﴾44:58﴿
58. (முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில்244 எளிதாக்கியுள்ளோம்.
فَارْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ
﴾ 44:59 ﴿
﴾44:59﴿
59. நீர் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்ப்பவர்கள்.