Loading...
அற்பப் பொருட்கள் • 7 வசனங்கள்
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா?
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
2. அவன் அனாதையை விரட்டுகிறான்.
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
3. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
4, 5. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.26
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
7. அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.