Loading...
யானை • 5 வசனங்கள்
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா?464
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.355