அல் ‌ஹூமஸா

புறம் பேசுதல் • 9 வசனங்கள்

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ 

﴾ 104:1 ﴿
﴾104:1﴿

1. குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ 

﴾ 104:2 ﴿
﴾104:2﴿

2. அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ 

﴾ 104:3 ﴿
﴾104:3﴿

3. தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.

كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ 

﴾ 104:4 ﴿
﴾104:4﴿

4. அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ 

﴾ 104:5 ﴿
﴾104:5﴿

5. ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ 

﴾ 104:6 ﴿
﴾104:6﴿

6. மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ 

﴾ 104:7 ﴿
﴾104:7﴿

7. அது உள்ளங்களைச் சென்றடையும்.

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ  فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ 

﴾ 104:8,9 ﴿
﴾104:8,9﴿

8, 9. நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.26

104

Settings