Loading...
திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி • 11 வசனங்கள்
الْقَارِعَةُ
1. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி!
مَا الْقَارِعَةُ
2. அது என்ன திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி?
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
3. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்ன வென்று உமக்கு எப்படித் தெரியும்?
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
4. அந்நாளில்1 மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
5. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
6, 7. யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.26
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ
8, 9. யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.26
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
10. ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
نَارٌ حَامِيَةٌ
11. (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.