அல் ஆதியாத்

வேகமாக ஓடும் குதிரைகள் • 11 வசனங்கள்

وَالْعَادِيَاتِ ضَبْحًا  فَالْمُورِيَاتِ قَدْحًا  فَالْمُغِيرَاتِ صُبْحًا  فَأَثَرْنَ بِهِ نَقْعًا  فَوَسَطْنَ بِهِ جَمْعًا 

﴾ 100:1,2,3,4,5 ﴿
﴾100:1,2,3,4,5﴿

1, 2, 3, 4, 5. மூச்சிரைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!379

إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ 

﴾ 100:6 ﴿
﴾100:6﴿

6. மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ 

﴾ 100:7 ﴿
﴾100:7﴿

7. அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான்.

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ 

﴾ 100:8 ﴿
﴾100:8﴿

8. அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ  وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ  إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ 

﴾ 100:9,10,11 ﴿
﴾100:9,10,11﴿

9, 10, 11. மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும் போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும் போது, அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிய வேண்டாமா?26

100

Settings